யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம்: தேவையற்ற விசமப் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி வேண்டுகோள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம்: தேவையற்ற விசமப் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி வேண்டுகோள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தேவையற்ற மற்றும் விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்த விபரம்
* பல்கலைக்கழகத்தின் பௌத்த மாணவர்கள் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகளை நடாத்துவதற்கு முறையாக அனுமதி கோரியிருந்தனர். இதற்கமைய நிகழ்வுகள் 30 ஆம் திகதி எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நிறைவு பெற்றன.
* 31 ஆம் திகதி இரவு 10:50 மணியளவில் முகங்களை மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர், வெசாக் அலங்காரத்தைச் சேதப்படுத்தினர். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் சென்றபோது அவர்கள் தப்பிச் சென்றனர்.
* மீண்டும் நள்ளிரவு 12:50 மணிக்கு அதே நபர்கள் உள்நுழைந்த போது, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களைத் துரத்தியதால் அவர்கள் தப்பிச் சென்றனர்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
* சம்பவம் குறித்து பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
* கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் பதிவாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நல்லுறவைப் பாதுகாத்தல்
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே கல்வி பயின்று வருகின்றனர்.
* பல்கலைக்கழகத்தின் சுமூகமான இயக்கத்தைக் குழப்புவதற்கும், தமிழ் - சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வைக் குலைப்பதற்கும் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
* எனவே, இவ்வாறான தேவையற்ற விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் பீடாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
கே ஆர் டி வி லங்கன் வாய்ஸ்
கே ஆர் டி வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
යාපනය විශ්වවිද්යාලයේ වෙසක් කූඩුවට හානි කිරීම: අසත්ය ප්රචාරවලින් වළකින ලෙස පීඨාධිපතිගෙන් ඉල්ලීමක්
යාපනය විශ්වවිද්යාල කළමනාකරණ හා වාණිජ පීඨයේ ඉදිකර තිබූ වෙසක් කූඩුව පසුගිය 31 වැනිදා මධ්යම රාත්රියේ හඳුනා නොගත් පිරිසක් විසින් විනාශ කිරීම සම්බන්ධයෙන් අනවශ්ය සහ අසත්ය ප්රචාරවලින් වළකින ලෙස එම පීඨයේ පීඨාධිපති මහාචාර්ය එන්. ගංගාදරන් ඉල්ලා සිටී.
සිද්ධිය පිළිබඳ විස්තර
* විශ්වවිද්යාලයේ බෞද්ධ සිසුන් විසින් පසුගිය 30 සහ 31 යන දිනයන්හි වෙසක් උත්සව පැවැත්වීම සඳහා නිසි අවසරයක් ලබාගෙන තිබුණි. ඒ අනුව 30 වැනිදා කිසිදු බාධාවකින් තොරව උත්සව අවසන් විය.
* 31 වැනිදා රාත්රී 10:50 ට පමණ මුහුණු වසාගෙන තාප්පයෙන් පැන ඇතුළු වූ හඳුනා නොගත් දෙදෙනෙකු වෙසක් සැරසිලි විනාශ කරන අයුරු ආරක්ෂක අංශ විසින් නිරීක්ෂණය කර ඇත. ආරක්ෂක නිලධාරීන් ඔවුන් දෙසට ගිය විට ඔවුන් පලා ගොස් ඇත.
* නැවත මධ්යම රාත්රී 12:50 ට එම පුද්ගලයින්ම නැවත ඇතුළු වූ අතර, ආරක්ෂක නිලධාරීන් ලුහුබැඳ ගිය විට ඔවුන් පලා ගොස් ඇත.
ගත් පියවර
* සිද්ධිය සම්බන්ධයෙන් පීඨාධිපතිවරයාට දැනුම් දී වහාම පියවර ගෙන ඇත.
* කෝපායි පොලිසිය සිද්ධිය වූ ස්ථානයට පැමිණ තොරතුරු ලබාගෙන ඇත. උපකුලපතිවරයාගේ උපදෙස් පරිදි ලේඛකාධිකාරීවරයා විසින් පොලිසියේ පැමිණිල්ලක් ගොනු කර ඇති අතර පරීක්ෂණ ආරම්භ කර ඇත.
සබඳතා ආරක්ෂා කිරීම
* යාපනය විශ්වවිද්යාල කළමනාකරණ හා වාණිජ පීඨයේ සියලුම ජාතීන්ගේ සිසුන් එකමුතුවෙන් සහ සහෝදරත්වයෙන් අධ්යාපනය ලබයි.
* විශ්වවිද්යාලයේ සුහදශීලී පැවැත්ම අඩපණ කිරීමට සහ දෙමළ - සිංහල සිසුන් අතර පවතින අවබෝධය බිඳ දැමීමට මෙම සිද්ධිය සිදු කර ඇති බවට සැක කෙරේ.
* එබැවින්, මෙවැනි අනවශ්ය අසත්ය ප්රචාරවලින් වළකින ලෙස පීඨාධිපතිවරයා සියලු දෙනාගෙන් ඉල්ලා සිටී.
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
දේශීය පුවත්
Vesak Decoration Damage at Jaffna University: Dean Urges Against Misinformation
Dean of the Faculty of Management Studies and Commerce, Professor N. Gangatharan, has urged the public to avoid spreading unnecessary or malicious propaganda regarding the incident where a Vesak decoration at the Jaffna University was damaged by unknown persons on the night of the 31st.
Incident Details
* Buddhist students at the university had obtained permission to hold Vesak events on the 30th and 31st. The events on the 30th concluded peacefully.
* Around 10:50 PM on the 31st, two unknown individuals, with their faces covered, jumped over the wall and damaged the Vesak decorations. Security officers observed them, but the individuals fled.
* At 12:50 AM, the same individuals returned, but fled again when chased by security personnel.
Actions Taken
* The Dean was informed immediately, and necessary actions were taken.
* Kopay police arrived at the scene to gather information. Following the Vice-Chancellor's instructions, a formal complaint was lodged by the Registrar, and investigations have been initiated.
Protecting Harmony
* Students of all ethnicities at the Faculty of Management Studies and Commerce at Jaffna University study together in unity and brotherhood.
* It is suspected that this incident was carried out to disrupt the smooth operation of the university and undermine the understanding between Tamil and Sinhala students.
* The Dean has requested everyone to refrain from spreading such unnecessary and malicious propaganda.
KR TV Lankan Voice
KR TV Network
Local News

Comments