காத்தான்குடி மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பு: பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு
காத்தான்குடி மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பு: பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு
பிரதேசமட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கில், 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு அரசாங்கத்தினால் ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் அமைவாக, மினி கார்மெண்ட்ஸ் (Mini Garments) தொழிற்சாலையை உருவாக்குவது தொடர்பான பொதுக்கூட்டம் இன்று (02/06/2026) காலை 11.45 மணியளவில் சமூக சேவை கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டமானது சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன், காத்தான்குடி சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதிகா சுதானந்தன், மற்றும் நசிபா ஆகியோரின் வழிகாட்டலில், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
ஊடகவியலாளர்: சிபானி
கே ஆர் டி வி லங்கன் வாய்ஸ்
கே ஆர் டி வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
ප්රදේශීය මට්ටමින් ආබාධිත පුද්ගලයින් සඳහා නව රැකියා අවස්ථා: ප්රජා ශක්ති වැඩසටහන යටතේ රුපියල් ලක්ෂ හතක මූල්ය ප්රතිපාදන
ප්රදේශීය මට්ටමින් ආබාධිත පුද්ගලයින්ගේ ස්වයං රැකියා නංවාලීම සඳහා 'ප්රජා ශක්ති' වැඩසටහන යටතේ ආබාධිත පුද්ගලයින්ගේ සංවිධානය වෙත රජයෙන් රුපියල් ලක්ෂ හතක මූල්ය ප්රතිපාදන ලැබී ඇත.
ඒ අනුව, කුඩා ඇඟලුම් කර්මාන්තශාලාවක් (Mini Garments) පිහිටුවීම පිළිබඳ මහජන හමුව අද (02/06/2026) පෙරවරු 11.45 ට සමාජ සේවා ගොඩනැගිල්ලේ දී පැවැත්විණි.
මෙම රැස්වීම සමාජ සේවා නිලධාරී එස්.ඒ.සී. නදිමුත්දීන්, කාත්තන්කුඩි සමාජ සේවා සංවර්ධන නිලධාරිනී රාධිකා සුදානන්දන් සහ නසිබා යන මහත්ම මහත්මීන්ගේ මගපෙන්වීම යටතේ, ආබාධිත පුද්ගලයින්ගේ සංවිධානයේ සභාපති, ලේකම් සහ සාමාජිකයින්ගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි. මෙම ව්යාපෘතිය හරහා ආබාධිත පුද්ගලයින් සඳහා රැකියා අවස්ථා ලබා දීමට නියමිතය.
මාධ්යවේදිනී: ශිබානි
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
දේශීය පුවත්
New Job Opportunities for Disabled Persons in Kattankudy: Government Allocation of Seven Lakh Rupees Under Praja Shakthi Scheme
Under the 'Praja Shakthi' programme, the disability organization in the Kattankudy region has received an allocation of seven hundred thousand rupees from the government to promote self-employment for persons with disabilities.
Accordingly, a public meeting regarding the establishment of a mini garments factory was held today (02/06/2026) at 11.45 am at the Social Services building.
The meeting was held under the guidance of Social Services Officer S.A.C. najimudin Kattankudy Social Services Development Officer Radhika Sudhananthan, and Nasiba, and was chaired by the President, Secretary, and members of the disability organization. Through this project, job opportunities are to be provided for persons with disabilities.
Journalist: Shiffani
KR TV Lankan Voice
KR TV Network
Local News







